ஆதார் அட்டை என்பது அரசின் சேவைகளைப் பெறுவதற்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். எனவே உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்குச் சென்று நீங்களே புதுப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் எப்படி புதுப்பிப்பது…?
முதலில் நீங்கள் uidai.gov.in ஐப் பார்வையிடவும். பின்னர் இணையதளத்தின் மேல் இடது மூலையில் உள்ள ‘My Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும்.
அடுத்து, NEW AADHAR பிரிவின் கீழ், Update Demographics Data Online’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.. அடுத்து ஆதாரைப் புதுப்பிக்க தொடரவும்’ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அந்த பக்கத்தில் தேவையான தகவலை உள்ளிடவும். அடுத்து உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு விவரங்களை CAPTCHA குறியீடு மூலம் சரிபார்க்கவும்.
இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதன் பிறகு ‘மக்கள்தொகை தரவு’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். புதிய பக்கத்தில், உங்கள் முகவரி விவரங்களைப் புதுப்பித்து, ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
சரிபார்ப்பின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றம் செய்து ‘SUBMIT’ என்பதைக் தேர்வு செய்யவும். முகவரியைப் புதுப்பிக்க ரூ.50 செலுத்த கட்டணம் செலுத்த வேண்டும்.