பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனை போன்ற பயன்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமான ஒன்று… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும். அத்தகைய பான் கார்டு நீங்கள் தொலைத்து விட்டால் இ-பான் கார்டு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் எப்படி பெறுவது..?
இ-பான் பெறுவதற்கு நீங்கள் முதலில் https://www.incometax.gov.in/iec/foportal என்ற வருமானவரித்துறை இணையதளத்திற்கு சென்று லாகின் செய்யவும். பிறகு நீங்கள் ‘Instant e-PAN’ என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். அடுத்ததாக ‘New e-PAN’ என்பதை கிளிக் செய்யவும், தற்போது பான் எண்ணை பதிவிடவும்..
நீங்கள் பான் எண்ணை மறந்துவிட்டால், ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். பின்னர் விதிமுறைகளை படித்து பார்த்து ‘Accept’ கொடுக்கவும்.அடுத்து உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளே பதிவு செய்யவும். பிறகு ‘Confirm’ என்பதை தேர்வு செய்யவும்.
விண்ணப்பதாரரின் இ-மெயில் ஐடிக்கு இ-பான் கார்டு PDF Formatல் அனுப்பப்படும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த பான் கார்டு பெறுவதற்குக் கட்டணங்கள் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆதார் எண் இருந்தால் போதும் பான் கார்டு பெற்றுவிடலாம்.