fbpx

Flight Mode-இல் இருந்தாலும் இன்டர்நெட் பயன்படுத்தலாம்..!! ரொம்ப ஈஸியான டிப்ஸ் இதோ..!!

உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளைட் மோட் (Flight Mode) அம்சத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்தாலும் கூட, உங்களுடைய போனில் இன்டர்நெட் சேவை இயங்க வேண்டுமா? அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதலில் உங்கள் போனில் டேட்டா மோட் ஆன் (Data Mode On) செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் போனில் பிளைட் மோட் ஆன் (Flight mode on) செய்துகொள்ளுங்கள். அடுத்தபடியாக, உங்கள் போனின் டயல்பேட் (Dialpad) ஓபன் செய்து அதில், *#*#4636#*#* என்று டைப் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்குப் புதிதாக ஒரு டேப் காண்பிக்கப்படும். இந்த பக்கத்தில் 3 விருப்பங்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதில் இருந்து Phone Information 1 என்ற ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் டூயல் சிம் பயனர் என்றால், உங்களுக்கு Phone Information 2 என்ற விருப்பமும் காண்பிக்கப்படும்.

Flight Mode-இல் இருந்தாலும் இன்டர்நெட் பயன்படுத்தலாம்..!! ரொம்ப ஈஸியான டிப்ஸ் இதோ..!!

நீங்கள் எந்த சிம் கார்டு (SIM card) இல் டேட்டா பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அந்த சிம் கார்டுக்கு ஏற்ற விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் சிம் கார்டு 1 இல் டேட்டா ஆன் செய்ய விரும்பினால் Phone Information 1 என்பதை கிளிக் செய்ய வேண்டும். சிம் 2 உங்கள் விருப்பம் என்றால், Phone Information 2 கிளிக் செய்யுங்கள். இப்போது புதிதாக மற்றொரு பக்கம் திறக்கப்படும், அதில் ஒரு கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள LTE/TD-SCDMA/UMTS என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்த பிறகு, பின் தோன்றும் விருப்பங்களில் இருந்து ஸ்க்ரோல் செய்து LTE/TD-SCDMA/UMTS என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

Flight Mode-இல் இருந்தாலும் இன்டர்நெட் பயன்படுத்தலாம்..!! ரொம்ப ஈஸியான டிப்ஸ் இதோ..!!

இப்போது தான் மிகவும் முக்கியமான விஷயத்தை செய்யப் போகிறோம். உங்களுக்குக் காண்பிக்கப்படும் ஆப்ஷன்களில் இருந்து Mobile Radio Power என்ற விருப்பத்தைத் தேடிப்பிடியுங்கள். இப்போது Mobile Radio Power விருப்பத்திற்கு அருகில் இருக்கும் On/Off டாக்கில் பட்டனை கிளிக் செய்து On விருப்பத்திற்கு மாற்றவும். அவ்வளவு தான், எல்லாமே முடிந்தது. இப்போது உங்கள் போனில் பிளைட் மோட் ஆன் செய்யப்பட்டிருந்தாலும் கூட, இனி இன்டர்நெட் சேவை மட்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனில் பிளைட் மோட் ஆக்டிவேட்டில் இருந்தால் கூட டேட்டா அம்சத்தைப் பயன்படுத்தலாம். முக்கிய குறிப்பு இந்த அம்சத்தில் உங்களுக்கு எந்த அழைப்புகளும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மத்திய அரசு திட்டம் மூலம் நீங்களும் ரூ.10,000 பெறலாம்...! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று...!

Fri Dec 2 , 2022
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தை அறிவித்தார். மக்கள் வசதியான முறையில் வங்கி, பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பிற நிதிச் சேவைகளை அணுகுவதை உறுதி செய்ய நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. உங்களிடம் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு இருந்தால், அதில் உள்ள பல்வேறு நிதிப்பலன்கள் குறித்து பார்க்கலாம்.. […]

You May Like