fbpx

ஆப்பிள் நிறுவனத்தின் அட்டகாச அறிவிப்புகள்..! புதிய ஐபோன், வாட்ச், ஏர்பட்ஸ் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியுமா?

புதிய ரக ஐபோன்கள், புதிய வாட்ச்கள் உள்ளிட்டவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், புதிய ரக ஐபோன்களை சிஇஓ டிம் குக் அறிமுகப்படுத்தி வைத்தார். ஐபோன்-14 ரகத்தின் தொடக்க விலை ரூ.79,900 என்றும், ஐபோன் 14 பிளஸ்-ன் தொடக்க விலை ரூ.89,900 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோன்-14 புரோ ரகத்தின் தொடக்க விலை ரூ.1,29,900 என்றும், ஐபோன் 14 புரோ மேக்ஸ்-ன் தொடக்க விலை ரூ.1,39,900 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய ரக செல்போன்கள் வரும் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அட்டகாச அறிவிப்புகள்..! புதிய ஐபோன், வாட்ச், ஏர்பட்ஸ் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியுமா?

இதேபோல் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்கள் 8 நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் வரும் 16ஆம் தேதி முதல் சந்தைக்கு வரவுள்ளதாகவும், இதன் விலை 29 ஆயிரத்து 900 ரூபாய் முதல் 45 ஆயிரத்து 900 ரூபாய் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பட்ஸ் சாதனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஏர்பட்ஸ் ப்ரோ-2 என பெயரிடப்பட்டுள்ள இதன் ஆரம்ப விலை 26 ஆயிரத்து 900 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொள்ளும் இந்தியர்கள்.. லான்செட் ஆய்வில் தகவல்..

Thu Sep 8 , 2022
இந்தியாவில் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமானோர் உட்கொள்கின்றனர் என்பது லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.. லான்செட் பிராந்திய சுகாதாரம்-தென்கிழக்கு ஆசியா அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது.. அதில் இந்தியாவில் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமானோர் உட்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.. அதிலும், அசித்ரோமைசின் 500 மிகி மாத்திரை இந்தியாவில் அதிகம் நுகரப்படும் ஆண்டிபயாடிக் மாத்திரையாக உள்ளது.. அதிகபட்சமாக 7.6 சதவீதம் மக்கள் இந்த மாத்திரையை பயன்படுத்துகின்றனர் என்றும், அதைத் தொடர்ந்து செஃபிக்ஸைம் 200 […]

You May Like