மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , ஐ.சி.சி. தலைவர் தேர்தலில் சவுரவ் கங்குலியை தலைமை தேர்தலுக்கு ஆதரவு அளிக்காதது வெட்கமற்ற அரசியல் எனவும் பழிவாங்கும் செயல் எனவும் கடுமையாக சாடி உள்ளார்.
’’ அவரை ஏன் ஐ.சி.சிக்கு அனுப்பவில்லை? வேறு ஒருவரின் ஆர்வத்தை பாதுகாப்பதுபோன்றது. பாஜ தலைவர்களிடம் இது பற்றி பேசியிருந்தேன். ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை. இதுவே ஒரு வெட்கப்பட வேண்டிய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என கூறினார். இதே போல சச்சின் டெண்டுல்கரை நாம் இழந்திருந்தால் கூட நான் இந்த பிரச்சனை பற்றிதான் பேசி இருப்பேன். என அவர் பேசினார்.
பி.சி.சி.ஐ தலைவர் பதவிக்கு கங்குலி பெயர் பட்டியலிடப்படாதது குறித்து மம்தா பானர்ஜி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இரண்டாவது முறையாக ஜெய்ஷா செயலாளராக அனுமதிக்கப்பட்டார். முன்னாள் இந்திய கேப்டனான கங்குலியை அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
வடக்கு வங்காளத்திற்குச் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் ’ சவுரவ் நன்றாக கிரிக்கெட் விளையாடி பெருமை தேடித்தந்தார். அவர் சிறந்த நிர்வாகியாகவும்வாரியத் தலைவராகவும் பொறுப்பை சிறப்பாக செய்தார். பாவிக்காலம் முடிந்த பின்னர் அவர் ஏன் நீக்கப்பட்டார். அமித்பாபு மகன் ஜெய்ஷா அதே பதவியை ஏன் தொடர்ந்தார் எனவும் தெரியவில்லை. அவர் பி.சி.சி.ஐ. செயலாளராக இருப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. சவுரவ் ஏன் நீக்கப்பட்டார் என்பதை நான் அறிய விரும்புகின்றேன். என்றார்.