fbpx

அச்சுறுத்தும் ’SOVA’ வைரஸ்..!! எப்படி ஹேக்கிங் நடக்கும்..? எப்படி பணத்தை பாதுகாப்பது..?

மொபைல் பேங்கிங்கை குறிவைத்து உருவாக்கப்பட்ட SOVA வைரஸ் குறித்து ’இந்தியக் கணினி அவசரக்கால மீட்பு குழு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மனிதனின் உடல் ஆரோக்கியத்தைச் சூறையாடப் பரவிய கொரோனா வைரஸை போலவே, நாம் பயன்படுத்தும் கைப்பேசியிலிருந்து நமது தகவலையும், பணத்தையும் சூறையாட பல்வேறு வகையான வைரஸ்கள், உருவாக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அவற்றை உடைத்து ஊடுருவப் பல வைரஸ்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அச்சுறுத்தும் ’SOVA’ வைரஸ்..!! எப்படி ஹேக்கிங் நடக்கும்..? எப்படி பணத்தை பாதுகாப்பது..?

இந்நிலையில் தற்போது மொபைல் பேங்கிங்கை குறிவைத்து உருவாக்கப்பட்ட சோவா வைரஸ் குறித்து ’இந்தியக் கணினி அவசரக்கால மீட்பு குழு’ (Indian Computer Emergency Response Team) ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சோவா, பழைய வைரஸ் தான் என்றாலும் கூட, தற்போது அது ஹேக்கர்களால் கூடுதலாக வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் அச்சமாக உருவாகியுள்ளது. 

அச்சுறுத்தும் ’SOVA’ வைரஸ்..!! எப்படி ஹேக்கிங் நடக்கும்..? எப்படி பணத்தை பாதுகாப்பது..?

எதற்காக சோவா (SOVA) வைரஸ் மீது இத்தனை அச்சம்..?

அமெரிக்க, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த சோவா வைரஸ். வளர்ந்த நாடுகளுக்கு இந்த ஹேக்கிங் பெரும் தலைவலியாக மாறி, பலர் தங்களது பணத்தை இழந்தனர். இதனைத் தொடர்ந்து, சோவா வைரஸுக்கு எதிராக வங்கி கணக்குகள், செயலிகள் என அனைத்திலும் பாதுகாப்பு விஷயங்கள் மேம்படுத்தப்பட்டது. பாதுகாப்பு வலுவடையும் போதெல்லாம், அதில் ஊடுருவும் வழியை ஹேக்கர்கள் உருவாக்கியே வந்துள்ளார்கள். அந்த வகையில், சோவா வைரஸை ஐந்தாவது தலைமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த ஹேக்கர்கள் தற்போது இந்திய வங்கிக் கணக்குகளைக் குறிவைத்துள்ளார்கள்.

அச்சுறுத்தும் ’SOVA’ வைரஸ்..!! எப்படி ஹேக்கிங் நடக்கும்..? எப்படி பணத்தை பாதுகாப்பது..?

எப்படி ஹேக்கிங் நடக்கும்?

நமது போனிற்கு வரும் போலி ஹேக்கிங் லிங்க்கை நாம் கிளிக் செய்தவுடன், நமது போனில் இருக்கும் மற்ற செயலிகளின் விவரங்கள் அனைத்தும் ஹேக்கிங் சர்வரின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். சர்வருக்கு உங்களது போன் மற்றும் அதிலிருக்கும் செயலிகள் குறித்த விவரங்கள் கிடைத்தவுடன், தகவல்களை XML என்னும் ஃபார்மெட்டில் ஆவணமாகச் சேமித்து வைத்துக் கொள்ளும். பின்னர், சோவா வைரஸ் ஊடுறுவி அனைத்து செயலிகளும் ஹேக்கர்களின் கட்டுப்பாடுக்குள் செல்லும். உடனே நமது மொபைல் பேங்கிங், பணம் பரிவர்த்தனை செய்யும் செயலிகள், குரோம் எல்லாம் ஹேக்கர்களால் கையாள முடியும். இப்படி தான் சோவா வைரஸ் செயல்படுத்தப்படுகிறது.

அச்சுறுத்தும் ’SOVA’ வைரஸ்..!! எப்படி ஹேக்கிங் நடக்கும்..? எப்படி பணத்தை பாதுகாப்பது..?

உடனே போன் செட்டிங்கை வலுப்படுத்துவது அல்லது ஆண்டி வைரஸ் போன்ற நடவடிக்கைகள் மூலம் இதிலிருந்து தப்பிக்கலாம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த வைரஸை பொருத்தவரை நீங்கள் நினைக்கும் வழிகளில் எளிதாக நீக்கிவிட முடியாது. காரணம் முன்னர் சொன்னது போல், சோவா வைரஸ் தற்போது ஜந்தாவது தலைமுறை வைரஸாக உருமாறிள்ளது என்பதால் மீண்டும் மீண்டும் உங்களது போன்களில் செயல்பட்டுக்கொண்டே தான் இருக்கும். இதனால் தான் தற்போது சோவா வைரஸ் குறித்த எச்சரிக்கைகள் அதிகரித்துள்ளது.

அச்சுறுத்தும் ’SOVA’ வைரஸ்..!! எப்படி ஹேக்கிங் நடக்கும்..? எப்படி பணத்தை பாதுகாப்பது..?

எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

* வாட்ஸ் அப், மெசேஜ் , இ-மெயில் , ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற ஏதாவது ஒரு சேவை மூலமாக வரும் லிங்க்குகளை, என்னவென்று யோசிக்காமல் க்ளிக் செய்யக்கூடாது. வங்கிகள் அல்லது ஆன்லைன் டெலிவரி போன்று நமக்கு பரிட்சியமான நிறுவனங்களிலிருந்து வரும் லிங்க் போன்று தான் இந்த ஹேக்கிங் வைரஸ் லிங்க்கும் இருக்கும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.

* நீங்கள் பயன்படுத்தும் செல்போனையும் அதிலிருக்கும் செயலிகளையும் அவ்வப்போது அப்டேட் செய்துவிட வேண்டும்.

* உங்களுக்கு தேவையான வங்கி தகவல்களை, டெலிவரி ட்ராக்கிங் அப்டேட்களை, ஆஃபர்களை என அனைத்து தகவல்களையும் அதற்குறிய அதிகாரப்பூர்வ தளத்திலும், செயலிலும் தான் சென்று பார்க்க வேண்டும்.

* எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்யும் போதும், பிளே ஸ்டோரிலிருந்து மட்டும் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் அந்த செயலி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அங்கிகரீங்கப்பட்ட செயலி தானா? அல்லது அதேபோல் இருக்கும் போலியா? என உறுதிப்படுத்திகொள்வதும் அவசியம்.

* எந்த ஒரு செயலியும் பதிவிறக்கம் செய்யும் போது அதுகுறித்த விவரங்களை சரிபார்க்க வேண்டும். அந்த செயலி கேட்கும் தேவையில்லா அனுமதிகளை கொடுக்கக்கூடாது.

Chella

Next Post

10 லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கிய முகாம்..!! ’உள்ளே சென்றால் திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை’..!!

Sat Oct 8 , 2022
‘மரணத்தின் நுழைவாயில்’ என்று அழைக்கப்படும் இடம் பற்றியும், அங்கு 10 லட்சம் பேர் எப்படி கொல்லப்பட்டனர் என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். வரலாறு படித்தவர்களுக்கு நிச்சயம் ஹிட்லரை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். ஜெர்மனியின் பயங்கரமான சர்வாதிகாரியாகவும், யூதர்களின் எதிரியாகவும் இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லரின் நாஜிக்களின் ராணுவத்தால் கட்டப்பட்ட சித்ரவதை முகாம்களில் சுமார் 10 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் பெரும்பாலனவர்கள் யூதர்கள் […]
10 லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கிய முகாம்..!! ’உள்ளே சென்றால் திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை’..!!

You May Like