உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தக் கூடிய ஒரு செயலிதான் வாட்ஸ் அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது வாட்ஸ்அப். எனினும் உங்களது தனிப்பட்ட கான்டாக்ட்ஸ் மற்றும் வாட்ஸ்அப் குரூப்களில் ஷேர் செய்யப்படும் மீடியாக்கள் மற்றும் டேட்டாக்கள் உங்கள் டிவைஸின் இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இறுதியில் அதை மிகவும் ஸ்லோவாக செயல்பட காரணமாகிறது. இதனை தவிர்க்க டிவைஸின் ஸ்டோரேஜை க்ளியர் செய்ய பெரிய சைஸ் வீடியோக்கள், ஃபோட்டோக்கள் அல்லது ஃபைல்ஸ்களை அவ்வப்போது டெலிட் செய்ய வேண்டும். உங்களது வாட்ஸ்அப் மீடியாவை நிர்வகிக்க மற்றும் நீங்கள் விரும்பாத ஃபைல்ஸ்களை டெலிட் செய்ய உதவும் சில வழிகளை இங்கே பார்க்கலாம். ஆனால் எந்த டேட்டாவையும் டெலிட் செய்யும் முன், உங்கள் டிவைஸில் வாட்ஸ்அப் எவ்வளவு ஸ்பேஸை எடுத்து கொள்கிறது என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். உங்களது WhatsApp Settings-ற்கு சென்று Storage and data > Manage storage சென்று பார்க்கவும். இங்கே உங்களது வாட்ஸ்அப் மீடியா எவ்வளவு ஸ்பேஸை எடுத்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்கலாம்.
![’உங்கள் ஃபோனை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும் வாட்ஸ் அப்’..!! தப்பிக்க என்ன செய்ய வேண்டும்..?](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-02-at-4.15.47-PM-1024x576.jpeg)
வாட்ஸ்அப் மீடியாவை ரிவ்யூ செய்து டெலிட் செய்வது எப்படி.?
* வாட்ஸ்அப் செட்டிங்ஸில் காணப்படும் Storage and data-வுக்கு சென்று Manage storage-க்கு செல்லவும்.
* Manage Storage-ன் கீழ் Larger than 5 MB ஆப்ஷன் அல்லது கீழ்காணும் குறிப்பிட்ட சேட்-ஐ டேப் செய்யவும். தவிர Newest, Oldest, Largest உள்ளிட்ட ஆப்ஷன்களை பயன்படுத்தி மீடியாவை வரிசைப்படுத்தலாம்.
* பின் தனிப்பட்ட அல்லது மல்டிபிள் மீடியாவை செலக்ட் செய்து அவற்றை டெலிட் செய்யவும்.
* வாட்ஸ் அப்பில் இருந்து குறிப்பிட்ட மீடியாவை நீக்கிய பிறகும் அவை உங்கள் மொபைல் ஸ்டோரேஜில் இருக்கக் கூடும். எனவே, அவற்றை நிரந்தரமாக டெலிட் செய்ய ஃபோன் கேலரியில் இருந்தும் டெலிட் செய்யவும்.
Search-ன் மூலம் வாட்ஸ்அப் மீடியாவை எவ்வாறு டெலிட் செய்வது..?
* வாட்ஸ் அப் சேட்ஸ் Tab-ஐ ஓபன் செய்து பின் வலது மூலையில் இருக்கும் சர்ச் ஐகானை டேப் செய்யவும்.
* நீங்கள் டெலிட் செய்ய விரும்பும் மீடியாவை (ஃபோட்டோக்கள், வீடியோக்கள் & டாக்குமென்ட்ஸ்) சர்ச் செய்து தேர்வு செய்யவும்.
* நீங்கள் நீக்க விரும்பும் Item-ஐ டேப் மற்றும் ஓபன் செய்யவும்.
* இப்போது More > Delete என்பதை டேப் செய்யவும்.
வாட்ஸ்அப் அப்லோட் குவாலிட்டிக்கு லிமிட் எவ்வாறு செட் செய்வது.?
* WhatsApp Settings-ஐ ஓபன் செய்து அங்கு காணப்படும் Storage and data-வை டேப் செய்யவும்.
* Media upload quality-யின் கீழே காணப்படும் ஆப்ஷன்களில் Auto, Best quality அல்லது Data saver இவற்றில் உங்களுக்கு தேவையான ஒன்றை செட் செய்யவும்.
* மொபைல் டேட்டா அல்லது வைஃபையில் தேவையற்ற மீடியா ஆட்டோ டவுன்லோட் ஆகாமல் இருக்க யூஸர்கள் மீடியா ஆட்டோ டவுன்லோடையும் கன்ட்ரோல் செய்யலாம்.