fbpx

மிக குறைந்த விலையில் Jaguar, BMW, Benz போன்ற சொகுசு கார்கள் வாங்கலாம்..!! எப்படி தெரியுமா..?

எப்படியாவது கார் வாங்கிவிட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அதிலும், சொகுசு கார்கள் என்றால் சொல்லவா வேண்டும். தற்போது சொகுசு கார்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. ஆனால், அதன் விலை அதிகம் என்பதால், பெரும்பாலோனோருக்கு அது கனவாகவே மாறிவிடுகிறது. “அதெல்லாம் போன காலம்… இப்போ எல்லாம் மாறிப்போச்சு” என்பது போல சொகுசு கார்களின் சந்தை நிலைமையும் தற்போது மாறிவிட்டது. ரூ.5 லட்சம் முதல் ஆடி, பென்ஸ் போன்ற பிரீமியம் கார்களை மக்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். அப்படி என்னென்ன கார்கள் சந்தையில் வட்டமடித்து வருகின்றன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ்

குறைந்த விலையில் ஒரு BMW கார் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ் கார்கள் சிறந்ததாக இருக்கும். 2012 – 2013 காலத்தில் வெளியான 90 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக ஓடிய கார்களை ரூ.5 லட்சம் என்ற விலையில் வாங்கலாம்.

பி.எம்.டபுள்யூ 5 சீரிஸ் (இ60)

நல்ல பி.எம்.டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கார் சிறந்ததாக இருக்கும். இ60 2008 மாடல், தற்போது சந்தையில் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. 90 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் ஓடிய கார்களுக்கு மட்டும் தான் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆடி A4

ஆடி காரில் சொகுசாக பயணிக்க விரும்பும் நபர்களுக்கு இது நல்லத் தேர்வாக இருக்கும். 2010 – 2012 காலங்களில் அறிமுகமான ஆடி ஏ4 மாடல் காரை, ரூ.5 லட்சம் இருந்தால் வாங்க முடியும். ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக பயணித்த வண்டிகள் இந்த விலைக்குக் கிடைக்கிறது.

ஆடி ஏ6

ஆடி காரிலேயே அளவில் பெரியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கார் சிறந்த தேர்வாக இருக்கும். 2012-களில் வெளியான ஆடி ஏ6 மாடல் காரை, ரூ.10 லட்சத்திற்கு வாங்க முடியும். 60 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடிய கார்களை கார்கள் இந்த விலைக்கு கிடைப்பதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆடி Q3

2013 – 2014 காலங்களில் வெளியான ஆடி Q3 மாடல் கார் ரூ.8 லட்சத்திற்கு கிடைக்கிறது. 70 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணித்த வண்டிகள் இந்த விலைக்குக் கிடைக்கிறது.

மெர்சீடிஸ் பென்ஸ் சி.எல்.ஏ

வாங்கினால், பென்ஸ் கார் தான் வாங்குவேனு நினைத்திருப்பவர்கள் இந்த Mercedes Benz CLA காரைத் தேர்ந்தெடுக்கலாம். 2015 முதல் 2016 வரை உள்ள மாடல்களைத் தேர்ந்தெடுத்தால் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கலாம். ஆனால், அவை 50 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் ஓடியதாக இருக்கும்.

ஜாகுவார் XF

ஜாக்குவார் நிறுவன கார் புயல் வேகத்திற்கும், மிருகத் தோற்றத்திற்கும் பெயர்போன கார்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதில் 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் வெளியான 60 ஆயிரத்துக்கும் அதிகமான கிலோமீட்டர் ஓடிய ஜாக்குவார் XF காரை வெறும் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிக் கொள்ளலாம்.

வோல்வோ XC 60

உலகின் தலைசிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சொகுசு காரான வோல்வோ XC 60 ரகம் உங்களுக்கு சிறந்தத் தேர்வாக அமையலாம். ஒரு லட்சம் கிலோமீட்டருக்கு மேல் பயன்படுத்திய 2012 முதல் 2014 மாடல் கார்களை ரூ.10 லட்சத்திற்கே உங்களால் வாங்கிக் கொள்ள முடியும்.

கார்களின் விலை இங்கு பட்டியலிடப்படிருந்தாலும், இடத்திற்கு ஏற்ப, தரத்திற்கு ஏற்ப விலையில் மாறுதல் இருக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என்னதான் குறைந்த விலையில் சொகுசு கார்களை வாங்கி விடலாம் என்றாலும், இதனை பழுதுபார்க்கும் செலவும் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

டிவிஎஸ் ஜூபிடர் ZX SmartXonnect..!! வாய்ஸ் அசிஸ்ட், சார்ஜர் போன்ற பல வசதிகள்..!! விலை எவ்வளவு தெரியுமா..?

Wed Aug 9 , 2023
இந்தியாவின் இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வியாழன் அன்று 110 ZX டிரம் வேரியன்ட் ஸ்கூட்டரை SmartXonnect தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை ரூ.84,468 ஆகும். இந்த புதிய வேரியன்ட் வாயிலாக ஜூபிடெர் புதிய தொழில்நுட்ப அம்சங்களைப் பெற்றுள்ளது. இது சாதாரண ZX டிரம் வேரியன்ட் ஸ்கூட்டரை விட ரூ.4,520 மலிவானதாகும். ஸ்டார்லைட் ப்ளூ, ஆலிவ் கோல்டு ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் […]

You May Like