தென்காசி பேருந்து விபத்து.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. அமைச்சர் நேரில் செல்ல உத்தரவு..!

MK Stalin dmk 6 1

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், பேருந்தில் பயணித்த பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த விபத்து, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் காமராஜர்புரம் பகுதியில் நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகளும் அதிவேகமாக வந்த நிலையில், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேதம் அடைந்துள்ளன.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 பேருந்துகளும் மோதி ஏற்பட்ட இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து கடையநல்லூர் பகுதி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தென்காசி விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ள அவர் “ தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.

உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
அவர்களைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : தாலியோட ஈரம் கூட காயல.. புதுமாப்பிள்ளைக்கு கனவிலும் நடக்க கூடாத சம்பவம்..! என்ன ஆச்சு..?

RUPA

Next Post

நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? மோடியிடம் இபிஎஸ் இதை கேட்பாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

Mon Nov 24 , 2025
டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, “சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?” என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் […]
EPS MK Stalin 2025

You May Like