சர்ச்சைக்குரிய தாய்லாந்து-கம்போடியா எல்லையில் புதிய மோதல்கள் வெடித்ததில் ஒரு தாய் வீரர் கொல்லப்பட்டார் மற்றும் 4 பேர் காயமடைந்தனர் என்று தாய் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் விந்தாய் சுவாரி தெரிவித்தார்.
மோதலுக்குப் பதிலளிக்க தாய்லாந்து, கம்போடியா அமைப்புகளின் மீது விமானத் தாக்குதல்கள் மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளும் முதலில் போர்நிறுத்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன. இதற்கு முன்பு ஜூலை மாதத்தில் 5 நாட்கள் நீடித்த கடும் மோதல்களில் 43 பேர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தப்பிச் செல்ல வேண்டியிருந்தது.
எல்லைப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் அதிகரித்திருப்பதால், இரு நாடுகளின் பாதுகாப்பு படையினரும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர். பேச்சுவார்த்தைகள் அல்லது இராஜதந்திர ஈடுபாடுகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த சண்டை திங்கள்கிழமை அதிகாலை உபொன் ராட்சத்தானி மாகாணத்தில் தொடங்கியது என்று சுவரீ தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ கம்போடிய படைகள் தாய்லாந்து படைகள்மீது கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர்.. இதில் ஒரு தாய் வீரர் உயிரிழந்தார் மற்றும் 4 8பேர் காயமடைந்தனர்.” என்று தெரிவித்தார்..
சில மணி நேரங்களுக்கு பின்னர், எல்லைப் பகுதியில் உள்ள கம்போடிய இராணுவ நிலைகளை குறிவைத்து தாய்லாந்து வான் தாக்குதல்கள் நடத்தியது என தாய்லாந்து உறுதிப்படுத்தியது.
கம்போடியா என்ன சொன்னது?
கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், முதலில் தாக்குதல் நடத்தியது தாய்லாந்து படைகள் தான் என்று கூறப்பட்டது. பிரேஹ் விஹியார் மற்றும் ஒட்டார் மீன்செய் மாகாணங்களில் தாய்லாந்து துப்பாக்கிச் சூடும் தாக்குதலும் நடத்தியதாக கம்போடியா குற்றம் சாட்டியது. கம்போடியா படைகள் எந்த வகையிலும் பதிலடி கொடுக்கவில்லை, நிலைமைக்கேற்ப கவனமாக கண்காணித்து வருகின்றோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த விமானத் தாக்குதல்களை “மனிதாபிமானமற்ற, கொடூரமான செயல்கள்” என்றும் 2025 அக்டோபரில் இரு நாடுகளும் கையெழுத்திட்ட கூட்டு அறிவிப்பை மீறும் செயல் என்றும் கம்போடியா கடுமையாக கண்டித்தது. அந்த அறிவிப்பிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் சாட்சியமாக இருந்தனர்.
இந்த விமானத் தாக்குதல்கள் தாய்லாந்து எல்லையும் அதன் பொதுமக்களையும் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை என்று அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது..
தாய்லாந்து அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ கம்போடியா படைகள் கனரக ஆயுதங்களை எல்லைக்கு அருகில் கொண்டு வந்து தாக்குதலுக்கு தயாரானதாக தோன்றியது. இதனால் தாய்லாந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானப்படையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தாக்குதல்கள் படைத்தளங்களுக்கு மட்டும் நடத்தப்பட்டன. ஆயுத களஞ்சியங்கள், கட்டளை மையங்கள், பொருட்கள் நகர்த்தும் வழித்தடங்கள் போன்ற ராணுவ வசதிகளையே குறிவைத்தனர்.” என்று தெரிவித்தனர்.
தாய்–கம்போடியா நீண்டகால எல்லைத் தகராறு
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான இந்த மோதலின் தொடக்கம், பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக்காலம் வரை செல்கிறது. அப்போது உருவாக்கப்பட்ட வரைபடங்களில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக எல்லைப் பகுதியிலுள்ள சில கோவில்கள் மற்றும் சுற்றியுள்ள நிலப்பகுதிகளுக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன.
இந்த விவகாரம் பல தசாப்தங்களாக நீடிக்கிறது. இரு தரப்பும் தங்களுக்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அந்த எல்லை பகுதியை இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியமானதாகக் கருதுகின்றன.
2025 ஜூலையில் ஏற்பட்ட 5 நாள் கடும் மோதலில் 43 பேர் உயிரிழந்தனர்.. மேலும் சுமார் 3 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நடுவர் முயற்சியில், 2025 அக்டோபரில் ஒரு நிறுத்துக்கோப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் தற்போது மீண்டும் வெடித்துள்ள மோதல்கள், அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான மோதல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது..
Read More : இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு..!



