மதுரை பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து … 5 பேர் பலி !!

பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவரின் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இவருக்கு சொந்தமாக இரண்டு குடோன்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பட்டாசுகள் எல்லாம் படபடவென வெடித்து சிதறியது. தீவிபத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் குடோனில் இருந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடல்கள், கால்கள் என தனித்தனியே சிதறிக்கிடந்த கோர சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளஇந்த விபத்தில் யார் ? யார் உயிரிழந்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கம்பட்டியை சேர்ந்த அமாவாசி, வல்லரசு, கோபி   மற்றும் புளியகவுண்டன் பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்கி, அழகு சிறை பகுதியை சேர்ந்த பிரேமா என ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குடோனில் நிறைய பேர் பணியாற்றி வந்ததாகவும் உயிரிழப்புகள் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.

Next Post

’கழுத்தை நெரித்து ஆணுறை இல்லாமல் பலாத்காரம் செய்த கிரிக்கெட் வீரர்’..!! வெளியான திடுக்கிடும் தகவல்..!!

Thu Nov 10 , 2022
கழுத்தை நெரித்து, ஆணுறை இல்லாமல் பாலுறவு கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனுஷ்க குணதிலக்க, பாலுறவின்போது ஆணுறையை […]
’கழுத்தை நெரித்து ஆணுறை இல்லாமல் பலாத்காரம் செய்த கிரிக்கெட் வீரர்’..!! வெளியான திடுக்கிடும் தகவல்..!!

You May Like