நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..

நியூசிலாந்தில் இன்று காலை 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் வியாழக்கிழமை காலை 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் -30.34 அட்சரேகை மற்றும் -175.17 தீர்க்கரேகையில் 41 கிலோமீட்டர் ஆழத்தில் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் இருந்து, 300 கிமீ வரம்பிற்குள் மக்கள் வசிக்காத, அருகில் உள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. எனினும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நியூசிலாந்திற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தேசிய அவசரகால மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது..


உலகின் மிகப்பெரிய டெக்டோனிக் தகடுகளான நியூசிலாந்தின் பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு சந்திக்கும் இடத்தில் நியூசிலாந்து அமைந்திருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.. நியூசிலாந்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..

RUPA

Next Post

மட்டன் சாப்பிட்ட 9 வயது சிறுமி பலி..!! குடும்பமே மருத்துவமனையில் அனுமதி..!! நடந்தது என்ன..?

Thu Mar 16 , 2023
ஆந்திர மாநிலத்தில் அரக்கு கனேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரவு நேரத்தில் மட்டன் சாப்பிட்டுள்ளனர். பின்னர், அனைவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில், திடீரென அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில், சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி என்ற 9 வயது சிறுமி […]
Mutton

You May Like