பிலிப்பைன்ஸில் நள்ளிரவில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மின்டானாவோ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10, 2025) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் 58 கிமீ (36.04 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (186 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. சுனாமி எச்சரிக்கையை கருத்தில் கொண்டு கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முதல் சுனாமி அலைகள் காலை 9:43 மணி முதல் 11:43- க்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “இந்த அலைகள் மணிக்கணக்கில் தொடரக்கூடும் என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. “உள்ளூர் சுனாமி சூழ்நிலை தரவுத்தளத்தின் அடிப்படையில், சாதாரண அலைகளை விட ஒரு மீட்டருக்கும் அதிகமாக அலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது, அடுத்த இரண்டு மணி நேரத்தில் சாதாரண அலைகளை விட ஒரு மீட்டருக்கும் அதிகமான உயர அலைகள் எதிர்பார்க்கப்படலாம் என்று பிவோல்க்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
கடந்த வாரம், பிலிப்பைன்ஸின் செபு மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம், பன்டாயனில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான புனித பீட்டர் திருச்சபையையும் அழித்தது, இது நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்தது.
Readmore: ‘லேடி தோனி’!. 34 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிச்சா கோஷ்!. முதல் பெண் விக்கெட் கீப்பர் என்ற பெருமை!.