Flash: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. ஒருவர் பலி..!!

blast 1712152099

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர். வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


தகவல் அறிந்து உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் கெளரி (50), இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில், குறிப்பாக சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெடி விபத்து சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஏற்பட்டுள்ள இவ்விபத்து, பட்டாசு தொழிலில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில் மீண்டும் கேள்விக்குறி எழுப்பியுள்ளது.

Read more: கருட புராணம்: பெண்களை தவறாக பார்ப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் இந்த விலங்காக பிறப்பார்கள்!

English Summary

Terrible explosion at a cracker factory near Sattur.. One person killed..!!

Next Post

50 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் திரிகிரஹி யோகம்! பணத்தை கட்டு கட்டாக அள்ளப்போகும் 3 ராசிகள்!

Wed Sep 17 , 2025
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றுகிறது. அவை மற்ற கிரகங்களுடன் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. விரைவில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று கிரகங்கள் சிம்மத்தில் ஒன்றாக வரும். இது ஒரு திரிகிரஹி யோகத்தை உருவாக்கியுள்ளது. சூரியனும் கேதுவும் ஏற்கனவே சிம்மத்தில் சஞ்சரித்து வருகின்றனர். இப்போது சுக்கிரனும் சிம்மத்தில் நுழைந்துள்ளார். சூரியன், சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை சிம்மத்தில் திரிகிரஹி யோகத்தை உருவாக்கியுள்ளது. தனுசு […]
raja yogam

You May Like