BREAKING: திருவள்ளூர் ரயிலில் பயங்கர தீ விபத்து…!

train 2025

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து. ஏற்படுத்தியுள்ளது. துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சரக்கு ரயிலில் திடீரென தீப்பிடித்தது. இதனால் இரு வழித்தடத்திலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே சரக்கு தடம் புரண்டதால் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த ரயில் பெட்டிகளில் தீ பற்றியது. இதன் காரணமாக பெரும் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ரயில் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்து வருவதால் அரக்கோணம் மார்க்கத்தில் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்டவற்றின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Vignesh

Next Post

40 அடி நீளம்.. 1 டன் எடை.. பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய ராட்சத பாம்பு இதுதான்.. ஆனால் எப்படி அழிந்தது ?

Sun Jul 13 , 2025
Did you know about the largest giant snake that lived on Earth 60 million years ago?
gigantic snake

You May Like