அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் லேலண்ட் நகரில் உள்ள பள்ளி ஒன்றில், உள்ளூர் மக்கள் ‘ஹோம்கமிங்’ என்ற ஆண்டு விழாவைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தனர். இதற்காக, அங்கு கால்பந்து போட்டியும் நடத்தப்பட்டது. நள்ளிரவு போட்டி முடிந்து அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்த தகவல் தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக 18 வயது இளைஞர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Readmore: டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!. நவ.10முதல் சேவையை தொடங்குகிறது இண்டிகோ!.