ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.. தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது..
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.. அதன்படி ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. எனினும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால், அவர்கள் ஆசிரியர் பணியை தொடரலாம் என்றும், 5 ஆண்டுகளுக்கு மேல் ஓய்வு பெறும் வயது இருந்தால் அவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.. இல்லையெனில் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை நிறுவனங்களில் அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா என்பதை விசாரிக்க உயர் அமர்வுக்கு வழக்கை பரிந்துரை செய்வதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. எனினும் இந்த தேர்வு எழுதாமலே சில ஆசிரியர்கள் பணியியில் சேர்ந்துள்ளனர்.. இவர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..
Read More : பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்..? சற்று நேரத்தில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..! தமிழக அரசியலில் பரபர..