டெக்சாஸ் வெள்ளம்!. பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு!. அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

texas floods trump visit 11zon

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த கனமழை வெள்ளம் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளநிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அதிபர் டிரம்ப் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இன்னமும் பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவரை வெள்ள பாதிப்பால் 120 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 161 பேர் காணவில்லை. உயிரிழப்பு எதிரொலியாக இதை பேரிடராக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சூழலில், வெள்ள பாதிப்புகளை அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர். பேஸ்பால் தொப்பி மற்றும் சூட் அணிந்திருந்த டிரம்ப் கள அதிகாரிகள் கூறிய விளக்கத்தை கேட்டறிந்தார்.

நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Readmore: இந்தியர்களை ‘புற்றுநோய்’ என அழைத்த X பயனர்!. சரியான பதிலடி கொடுத்த AI Grok!

KOKILA

Next Post

உயில் இல்லையென்றால், தந்தையின் சொத்தில் மகளுக்குப் பங்கு கிடைக்குமா? கிடைக்காதா? சட்டம் என்ன சொல்கிறது..

Sat Jul 12 , 2025
If there is no will, will a daughter get a share in her father's property? What does the law say? Let's find out..
Legal Property Rights 2

You May Like