குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள ஜஹாங்கீர்புரா பகுதியில் பார்க் பெவிலியன் என்ற ஸ்டார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.. இந்த ஓட்டலில் மிகப்பெரிய விபச்சார கும்பல் இயங்கி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதில், சர்வதேச அளவிலான விபச்சார கும்பல் அங்கே இயங்கி வந்தது தெரிய வந்தது.
சோதனையில், வேலை வாய்ப்பு என்ற பெயரில் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 13 இளம் பெண்கள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டிருந்தது தெரியவந்தது. இவர்களை வைத்து ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை வசூலித்து வாடிக்கையாளர்களிடம் விபச்சாரம் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கும்பலைச் சேர்ந்த ஓட்டல் மேனேஜர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், இந்த கும்பலை இயக்கிய முக்கிய குற்றவாளி ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்தால் மட்டுமே, இதற்குப் பின்னால் இருக்கும் முழு வலைவீச்சு வெளிச்சம் பார்க்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கும்பலுக்கு பல்வேறு முக்கிய பிரபலங்களுடனும் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதனால், இந்த வழக்கு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கூறியதாவது:
“முதலில் இது ஒரு சாதாரண விபச்சார வழக்காகவே நினைத்தோம். ஆனால் சோதனைக்குப் பிறகு, இது ஒரு அகில இந்திய அளவிலான பெண்கள் விற்பனை கும்பல் எனத் தெரியவந்தது. சமூகத்தை உலுக்கிய இந்த சம்பவம், மற்ற குற்றகும்பல்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்” என தெரிவித்தனர்.
Read more: கிராம்பு ஊற வைத்த நீரை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?