பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இன்று பல திருப்பங்கள் நடக்கின்றன. கடையில் நடக்கும் பிரச்சனைகளால் பழனி மனஅழுத்தத்தில் இருக்கிறான். பாண்டியன் எல்லாரின் முன்னும் திட்டுவதால் அவன் மனம் வருந்துகிறான். இதே நேரத்தில் அண்ணன்கள், “நீ தனியாக கடை வைக்கணும்” என்று சொல்லி அவனை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
மயிலின் அப்பாவை நம்பி கடையை விட்டு வர தயக்கம் காட்டிய சரவணன் பழனியை கடையில் இருக்கச் சொல்லி, டெலிவரிக்குச் செல்கிறான். இதற்கிடையில் பாண்டியன் கடைக்கு வந்து “டெலிவரிக்கு போகாமல் என்னடா பண்ணிட்டு இருக்க?” என்று பழனியை கண்டிக்கிறான். இதனால் மனம் உடைந்த பழனி அங்கிருந்து கிளம்புகிறான்.
அதே நேரத்தில், கதிர் டிராவல்ஸ் அலுவலகத்தில் இருக்கும் போது, ராஜி புடவையில் வந்து அவனை சந்திக்கிறாள். காலை நடந்த பிரச்சனையைப் பற்றி ராஜி, “நான் விளையாட்டாக தான் நடந்தேன், பேசாமல் மட்டும் இருக்காதே” என்று சமாதானப்படுத்துகிறாள். இதனால் கதிரும் சிரிக்கிறான்.
அப்பொழுது பழனி வர, அவன் சோகமாக இருப்பதை கதிர் கவனிக்கிறான். டீ குடிக்கலாம் என்று அழைக்கும்போது, பழனிக்கு டெலிவரிக்காக போன் வருகிறது. அதனால் அவன் கிளம்பி விடுகிறான். மீனா வீட்டில் தீபாவளி சீர் பற்றிய வாக்குவாதம் நடக்கிறது. மாமனார், மாமியார் சீர் கொடுக்க வர, செந்தில் அதில் அதிருப்தி காட்டுகிறான். “நம்ம குவார்ட்டஸ்ல தான் தீபாவளி கொண்டாடணும்” என்று கோபமாக கூறி கிளம்புகிறான்.
இதற்கிடையில் மயிலின் அப்பா, “சீர் பணம் ரெடி பண்ணி கொடு” என கேட்டதில் மயில் கோபமடைகிறாள். அப்பொழுது பாண்டியனுக்கு பணம் கொடுக்க ஒருவர் வர, அவர் கொடுத்த பத்து ஆயிரத்தை மயிலின் அப்பா சீர் பணமாக எடுத்துக்கொள்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மயில், “இது பெரிய பிரச்சனையாகி விடும்” என பயப்படுகிறாள். பண விஷயம் பாண்டியன் வீட்டில் பூதாகரமாக வெடிக்கலாம். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து நாளைய எபிசோட்டில் பார்க்கலாம்.
Read more: ‘H Files’ : அடுத்த அணுகுண்டை வீசிய ராகுல் காந்தி.. ஹரியானாவில் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள்..!



