‘H Files’ : அடுத்த அணுகுண்டை வீசிய ராகுல் காந்தி.. ஹரியானாவில் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள்..!

rahul haryana 1762326002 1

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “H Files” எனும் புதிய ஆவணத் தொகுப்பை வெளியிட்டு, ஹரியானாவில் வாக்கு திருட்டு (Vote Chori) குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் “ஹரியானாவில் 8-ல் ஒரு பங்கு போலி வாக்காளர்கள் மொத்தம் 5.51 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர்.. ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 25,41,144 வாக்கு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு தொகுதி மட்டுமல்ல, முழு மாநிலத்திலும் வாக்குகளை திருடி உள்ளனர்.. தேசிய அளவிலும் ‘திருடியிருக்கிறார்கள்’ என்பதே உண்மை.”


ராகுல் காந்தி மேலும் “முதலில், இது தனித்தனியான தொகுதிகளில் நடக்கிறது என்று நினைத்தோம். ஆனால், இது முழு மாநில அளவிலான திட்டமிட்ட வாக்கு திருட்டு என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.. ஹரியானாவில் எங்கள் வேட்பாளர்களிடமிருந்து பல புகார்கள் வந்தன.. ஏதோ தவறு நடக்கிறது என்று. அவர்கள் முன்கூட்டிய கணிப்புகள் அனைத்தும் தலைகீழானது.

இதுபோன்ற அனுபவத்தை நாங்கள் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய இடங்களிலும் கண்டிருந்தோம். அதனால் ஹரியானாவில் நடந்ததைக் குறிக்கோளாக வைத்து விசாரிக்க தீர்மானித்தோம்.” என்று கூறினார்..

முதல் முறையாக வித்தியாசமான தபால் வாக்குகள்

தொடர்ந்து பேசிய அவர் “ஹரியானா தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத விதமாக, இந்த முறை தபால் வாக்குகள் (Postal Votes) மற்றும் உண்மையான வாக்குகள் முழுமையாக வேறுபட்டிருந்தன. இது ஒரு சாதாரண வேறுபாடு அல்ல.. ஏதோ பெரும் தந்திரம் நடந்திருக்கிறது. இந்தத் தகவல்களை முதலில் பார்த்தபோது எனக்கு நம்ப முடியவில்லை. நான் அதிர்ச்சியில் இருந்தேன். அதனால் என் குழுவை பலமுறை மீண்டும் சரிபார்க்கச் சொன்னேன்,” என்று கூறினார்..

“வெற்றி தோல்வியாக மாற்றப்பட்ட திட்டம்”

“இந்தியாவின் இளைஞர்கள், GenZ தலைமுறை, இதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.. இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது. எங்களிடம் 100% ஆதாரங்கள் உள்ளன. காங்கிரஸின் பெரும் வெற்றியைத் தோல்வியாக மாற்றுவதற்காக திட்டமிட்ட சதி நடந்தது என்பது உறுதி. தேர்தலுக்குப் பிறகு இரண்டு நாளில் ஹரியானா முதல்வர் நாயாப் சைனி சிரித்துக்கொண்டிருப்பதைப் பாருங்கள்; அவர் சொல்வது அந்த ‘வ்யவஸ்தா’ (அமைப்பு) பற்றிதான்,” என்று ராகுல் காந்தி கூறினார்.

“ஹைட்ரஜன் குண்டு” எச்சரிக்கை

முன்னதாக, செப்டம்பர் 1 அன்று, ராகுல் காந்தி “மகாதேவபுரா பற்றி வெளிப்படுத்தியதெல்லாம் ஒரு அணுகுண்டு (Atom Bomb) மாதிரி தான்;
ஆனால், விரைவில் நான் வெளியிடப் போவது ஒரு ஹைட்ரஜன் குண்டு (Hydrogen Bomb),”
என்று பாஜகவை எச்சரித்திருந்தார்.. மேலும் “ மகாத்மா காந்தியை கொன்ற அதே சக்திகள் இன்று இந்திய அரசியலமைப்பை அழிக்க முயல்கின்றன
என்று பாஜகவை கடுமையாக சாடினார்..

ராகுல் காந்தி தலைமையில் ‘Voter Adhikar Yatra’,
வாக்குரிமை விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் தேர்தல் பட்டியலில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவும் 16 நாட்கள் நடத்தப்பட்டது.. ராகுல் காந்தியின் “H Files” , ஹரியானா அரசியல் சூழ்நிலையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குற்றச்சாட்டுகளுக்கு பாஜக இன்னும் அதிகாரபூர்வ பதில் அளிக்கவில்லை.

RUPA

Next Post

மீண்டும் மீண்டும் கடை பணத்தில் கை வைக்கும் மயில் அப்பா.. மீனாவால் அப்செட்டான செந்தில்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்..

Wed Nov 5 , 2025
Thangamayil Appa, who repeatedly takes money from the shop, is a Pandian who humiliates Palani..! Pandian Stores Update..
pandiyan store

You May Like