பல்வேறு புவியியல் நிலப்பரப்புகள் கொண்ட இந்தியா பொதுவாக கடும் கோடைக்கால வெப்பத்திற்காக அறியப்படுகிறது.. நம் நாட்டில் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைக் கடக்கும். ஆனால் உலகில் சில நாடுகளில் சராசரி வெப்பநிலை வெறும் 7°C முதல் -4°C வரை மட்டுமே இருக்கும்.
கனடா
அதிகமான இந்தியர்கள் குடிபெயர்ந்துள்ள கனடா உலகிலேயே மிகக் குளிரான நாடாகும். இங்கு சராசரி வெப்பநிலை -4°C வரை குறையும். கனடாவின் பெரும்பகுதி ஆர்க்டிக் சுற்றுவட்டாரத்தில் இருப்பதால், நீண்ட மற்றும் கடுமையான குளிர்காலங்களை அனுபவிக்கிறது.
ரஷ்யா
உலகிலேயே நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடான ரஷ்யாவின் பெரும்பகுதி சைபீரியா பகுதியில் உள்ளது. சராசரி வெப்பநிலை -3.1°C. சைபீரியா உலகிலேயே மிகக் குளிரான மனித வசிப்பிடமாகக் கருதப்படுகிறது.
மங்கோலியா
சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைந்துள்ள மங்கோலியா உலகின் மூன்றாவது மிகக் குளிரான நாடாகும். சராசரி வெப்பநிலை 1.4°C. மலைப்பகுதிகளால் சூழப்பட்ட இந்த நாடு கடுமையான குளிர்காலங்களை சந்திக்கிறது.
ஐஸ்லாந்து
பெயருக்கு ஏற்றவாறு மிகக் குளிரான நாடு. இது துணை-ஆர்க்டிக் பிராந்தியமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கல்ப் ஸ்ட்ரீம் எனப்படும் வெப்பக் கடல் நீரோட்டம் சிறிதளவு வெப்பம் வழங்குவதால் சராசரி வெப்பநிலை 2.2°C ஆக உள்ளது.
நார்வே
வடக்கு ஒளி (Northern Lights) காட்சிக்குப் புகழ்பெற்ற நார்வேவில் சராசரி வெப்பநிலை 2.6°C. குளிர்காலங்களில் இங்கு வெப்பநிலை பனிமட்டத்திற்கு மிகவும் கீழே விழும்.
பின்லாந்து
நார்வேவின் அண்டை நாடான பின்லாந்து சராசரியாக 3.0°C வெப்பநிலையுடன் உலகின் ஆறாவது மிகக் குளிரான நாடு. வடக்கு பின்லாந்தில் வெப்பநிலை -30°C வரை குறையும்.
கிர்கிஸ்தான்
மத்திய ஆசியாவில் அமைந்துள்ள இந்த நாடு, அதன் தனிப்பட்ட புவியியல் காரணமாக, கோடையில் மிதமான வெப்பமும் குளிர்காலத்தில் 0°Cக்கு அருகிலான குளிரும் அனுபவிக்கிறது. சராசரி வெப்பநிலை 3.0°C.
ஸ்வீடன்
உலகின் மிகக் குளிரான நாடுகளில் ஒன்று. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கிடையில் பெரிய காலநிலை வேறுபாடுகள் உள்ளன. சராசரி வெப்பநிலை 3.6°C.
தஜிகிஸ்தான்
மத்திய ஆசியாவில் அமைந்துள்ள தஜிகிஸ்தான், கோடையில் 40°C வரை வெப்பம் எட்டும் போது, குளிர்காலத்தில் பாமீர் மலைப்பகுதியில் -50°C வரை குறையும். இதனால் சராசரி வெப்பநிலை 4.2°C.
எஸ்டோனியா
பால்டிக் கடலுக்கு அப்பால் ஸ்வீடன், பின்லாந்துக்கு அடுத்துள்ள எஸ்டோனியா, சராசரி வெப்பநிலை 6.8°C. அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டங்கள் இந்நாட்டை சிறிதளவு வெப்பமடையச் செய்கின்றன.
மொத்தத்தில், கனடா, ரஷ்யா, மற்றும் மங்கோலியா உலகின் மூன்று மிகக் குளிரான நாடுகளாக கருதப்படுகின்றன.. அங்கு பெரும்பாலான இடங்களில் வருடத்தின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும்.
Read More : ரூ.1600 கோடி சாம்ராஜ்யம்! ஆனாலும் இரவில் டாக்ஸி ஓட்டும் 86 வயது முதியவர்..! பிரமிக்க வைக்கும் காரணம்..!



