Election: நாடே எதிர்பார்த்த 2-ம் கட்ட தேர்தல்…! இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை…!

2024 பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு இன்று 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் மாறுபடும்.

இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டத்தில் 15.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்காளர்களில் 8.08 கோடி பேர் ஆண்கள், 7.8 கோடி பேர் பெண் வாக்காளர்கள், 5,929 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள். 34.8 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 3.28 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர்.இந்த 2-ம் கட்டத் தேர்தலில் 1202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். (ஆண்கள் – 1098; பெண்கள்-102; மூன்றாம் பாலினத்தவர் – 02) 4553 பறக்கும் படைகள், 5731 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 1462 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் எளிதில் வாக்களிக்க, வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறைகள், சாய்வுதளம், சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு தேதி ஆகியவற்றை இந்த இணையதள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம் https://electoralsearch.eci.gov.in/வாக்குச் சாவடிகளில் அடையாள சரிபார்ப்புக்காக வாக்காளர் அடையாள அட்டை (EPIC) தவிர 12 மாற்று ஆவணங்களையும் காண்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அதிகரிக்கும் வெப்ப அலை... தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு...! முதல்வர் அதிரடி...!

Fri Apr 26 , 2024
வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை. இது குறித்து தமிழக முதல்வர் தனது செய்தி குறிப்பில்; அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்’என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம். வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் […]

You May Like