விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் அதிமுக Ex MLA..! அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

tvk jcd prabakaran

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது..


தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டும் ஆக்டிவாக செயல்பட தொடங்கி உள்ளார்.. சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

மேலும் தவெக தலைமையையை ஏற்று கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.. கூட்டணி குறித்து அனைத்து இறுதி முடிவுகளை எடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.. தவெக சார்பில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கும் சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது..

இதனிடையே அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சிடி. பிரபாகரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.. விஜய் முன்னிலையில் இன்று அவர் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.. அதிமுக உடைந்த பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த அவர் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.. தனது ஆதரவாளர்கள் மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெகவில் அடுத்துடுத்து பல தலைவர்கள் குறிப்பாக அதிமுக தலைவர்கள் இணைந்து வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..

செங்கோட்டையனை தொடர்ந்து மேலும் பல தலைவர்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவார்கள் என்று விஜய் கூறியிருந்தார்.. அவர்களுக்கு தவெகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : “காங்கிரஸில் ஜிங் ஜாங் போடும் குரூப் தான் உள்ளது.. மக்களுக்காக பேச யாரும் இல்லை..” அண்ணாமலை விமர்சனம்..!

RUPA

Next Post

அடுத்த ஷாக்..! பாலியல் துன்புறுத்தல் மற்றும் ராகிங்கால் கல்லூரி மாணவி உயிரிழப்பு; பேராசிரியர் & 3 மாணவிகள் மீது வழக்கு பதிவு..!

Fri Jan 2 , 2026
இமாச்சலப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதைத் தொடர்ந்து டிசம்பர் 26 அன்று உயிரிழந்தார். இது தொடர்பாக, ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று பேர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு […]
rape case 1767363452 1

You May Like