பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார், தனது சிறு வயது முதலே கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். இடையே உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரேஸிங்கில் ஈடுபடாமல் இருந்து வந்த அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு திரும்பியுள்ளார். அஜித் குமார் ரேசிங் என்ற அணியை உருவாக்கிய அவர், இளம் வீரர்களுக்கும் பயிற்சி கொடுக்கிறார். தற்போது, அவரது ரேஸிங் அணி, உலகளாவிய ரேஸிங் போட்டிகளில் மிகச் சிறந்த புரட்சியை செய்துள்ளது.
பெல்ஜியமில் நடந்த க்ரவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி 3 சாம்பியன்ஷிப் போட்டியில் “Pro-Am” பிரிவில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது. க்ரவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி 3 சாம்பியன்ஷிப் என்பது ஐரோப்பா வட்டாரங்களில் மிகப்பெரிய கார் ரேஸிங் போட்டிகளில் ஒன்றாகும். இதில் பங்கு பெறுவதே ஒரு சாதனை. அந்தவகையில் அஜித் குமார் அணியின் வெற்றி, இந்தியாவின் ரேஸிங் வரலாற்றையே தொட்டெழுப்பும் அளவுக்கு பேசப்படுகிறது.
இது குறித்து அஜித் குமார் ரேஸ் அணி வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘எங்கள் அணியின் பேபியன், மேதியூ அடங்கிய குழுவினர், மிகவும் கடினமான போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,’ என்று குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே, துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றி மூலம் அஜித் குமாரின் புது அத்தியாயம் தொடங்கியுள்ளது.
Read more: சூப்பர்..! அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அவகாசம் 2026 வரை நீட்டிப்பு…!!