நாட்டையும் உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து குறித்து பிரபல ஜோதிடர் முன்கூட்டியே கணித்துள்ளார்.
குஜராத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நேற்று பிற்பகல் 1.17 மணியளவில் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. விடுதியில் மருத்துவ மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த சோகம் அரங்கேறி உள்ளது.
இதனால் விடுதி அறையில் தங்கியிருந்த சில மாணவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது. இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட 265 உயிரிழந்தனர். நாட்டையும் உலுக்கிய இந்த விமான விபத்து குறித்து பிரபல ஜோதிடர் முன்கூட்டியே கணித்துள்ளார்.
டிசம்பர் 29, 2024ல் ஜோதிடர் ஆஸ்ட்ரோ ஷர்மிஷ்தா தனது X பதிவில், “2025ல் விமானத் துறை முன்னேறும், ஆனால் விமான விபத்து தலைப்புச் செய்திகளாக நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும்” என்று குறிப்பிட்டார். இது விபத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டது.
அதன் பின் கடந்த வாரம் ஜூன் 5, 2025 அன்று மற்றொரு பதிவில், “விமானத் துறையில் விரிவாக்கம் இருக்கும், டாடா நிறுவனம், ஹைதராபாத்தில் ரஃபேல் விமானத்தின் உடல் பகுதியை உருவாக்கும். இஸ்ரோ விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் பொறியியல், விண்வெளி சுற்றுலா ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளில் உலகையே பிரம்மிக்க வைக்கும். ஆனால் விமான விபத்து குறித்த எனது கணிப்பை இன்னும் உறுதியாகக் கூறுகிறேன்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.
ஷர்மிஷ்தா தனது கணிப்புகளுக்கு நட்சத்திர மாற்றங்கள் (Nakshatra transit) மற்றும் கிரகங்களின் இயக்கங்களை அடிப்படையாகப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். குறிப்பாக, குரு (Jupiter) கிரகம் மிதுன ராசியில் உள்ள மிருகசீரிடம் மற்றும் ஆருத்ரா நட்சத்திரங்களில் செல்லும் போது, விமானத் துறையில் முன்னேற்றம் இருந்தாலும், பாதுகாப்பு சமரசம் மற்றும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என்று குறிப்பிட்டார். இவரின் இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.