வெளியான பிறந்தநாள் புகைப்படம், ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அதிதி..!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் 2வது மகளான அதிதி ஷங்கர், கடந்தாண்டு கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அடிப்படையில் மருத்துவரான அவர், சினிமாவுக்குள் நுழைந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விருமன் படம் அதிதிக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். இந்த படத்தில் அவர் பாடல் ஒன்றையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். 


இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திலும் அதிதி ஒரு பாடல் ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியுள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவிற்குள் நுழைந்த அதிதி, தனது தனி திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மாவீரன் படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் நடிக்கும் படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் அதிதி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி அதிதி ஷங்கர் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

இப்படியான நிலையில், அதிதி பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற உடையில் பார்ப்பதற்கு தேவதைப் போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

RUPA

Next Post

அம்பானிக்கு வந்தாச்சு கிரீன் சிக்னல்..!

Sat Jul 8 , 2023
இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி ஐபிஓ வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் நிலையில், தற்போதைய வர்த்தக கட்டமைப்பில் அனைத்து வர்த்தகமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் வேளையில் தனியாக பிரித்து ஐபிஓ வெளியிட்டால் பெரும் தடுமாற்றம் வரும் என்பதை உணர்ந்தார். இதை டெஸ்ட் செய்யும் வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தற்போது ஆரம்பக்கட்ட வளர்ச்சி பாதையில் இருக்கும் தனது நிதி சேவை பிரிவை தனியாக பிரித்து பங்குச்சந்தையில் […]
mukesh ambani 1100x733 1

You May Like