புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரின் 23 வயதான மகள், சென்னையில் தபால் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். தபால் அதிகாரியான பெண்ணுக்கு, சேலம் மேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாண்மைத்துறையில் பணியாற்றி வரும் அரசு ஊழியர் ஒருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடத்த திட்டமிட்டு பணிகளை செய்து வந்தார்கள். திருமணத்தையொட்டி மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் இருதரப்பு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டார்கள். இதற்காக மணப்பெண், மணமகன் வீட்டார் நேற்று முன்தினம் மாலையே மண்டபத்திற்கு வந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் திருமணத்தன்று மணமகன் மணமேடையில் அமர்ந்திருந்த நிலையில் சடங்குகள் செய்வதற்காக, புரோகிதர் மணமகளை அழைத்திருக்கிறார். மணப்பெண்ணை அழைத்து வருவதற்காக அவரது அறைக்கு உறவினர்கள் சென்றனர். ஆனால் அறையில் மணப்பெண் இல்லை. மண்டபத்தில் இருந்து மணப்பெண் திடீரென காணாமல் போய்விட்டார்.
மணப்பெண்ணை காணவில்லை என உறவினர்கள் மண்டபம் முழுவதும் தேடினர். செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே மணப்பெண் தனது தாய்க்கு வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், ‘எனக்கு திருமணம் பிடிக்கவில்லை. என்னை யாரும் தேட வேண்டாம்’ என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானர்.
பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி செய்து வைக்கும் திருமணம் ஒரு இளைஞனின் வாழ்க்கையே கேள்விக் குறி ஆக்கியுள்ளது. திருமணத்தில் விருப்பம் இல்லாமல் திருமணத்தன்று மணப்பெண் ஓடிப்போன சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளானது.
Read more: ரோகிணியால் வீட்டை விட்டு வெளியேறும் மீனா.. பாயிண்டை பிடித்த ஸ்ருதி..!! சிறகடிக்க ஆசை அப்டேட்..



