பேச மறுத்த கள்ளக்காதலியின் கையை வெட்டிய கொடூரம்.. அடுத்த நொடியே மனம் மாறிய மெக்கானிக்..! என்ன நடந்தது..?

Love Sex 2025

திருப்பூர் மாவட்டம் பெருந்தொழு பகுதியை சேர்ந்தவர் சித்ரா (36). இவரது கணவர் இறந்த நிலையில் தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே பக்கத்து வீட்டில் வசிக்கும், மெக்கானிக் கருப்பண்ணன் என்பவருடன் சித்ராவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக இந்த பழக்கம் தொடர்ந்து வந்த நிலையில், திடீரென இவர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டு, அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளது.


இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சித்ரா கருப்பண்ணனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் கருப்பண்ணனால் தனக்கு பிரச்சனை வராமல் இருக்க அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டார். இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இருவருக்குள் எந்த தொடர்பும் இல்லை என ஒப்புதல் வாக்குமூலமும் வாங்கி அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னரும் சித்ராவுடனான தொடர்பை கருப்பண்ணனால் கைவிட முடியவில்லை. தொடர்ந்து சித்திராவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் சித்ராவின் வீட்டிற்குள் வரவும் முயற்சி செய்துள்ளார். சித்ரா தடுக்கவே ஆவேசம் அடைந்த கருப்பண்ணன், தான் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சித்ராவை சரமாறியாக வெட்டினார்.

வலியால் அலறி துடித்த சித்ராவை பார்த்த கள்ளக்காதலன் உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவைத்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்.. இறுதியாக அவிநாசி பாளையம் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்ராவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. தன்னிடம் பேச மறுத்த கள்ளக் காதலியை அறிவாளால் வெட்டிவிட்டு அவரே மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: ஷாக்!. இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியது!. சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

English Summary

The brutality of cutting off the hand of a blacksmith who refused to talk.. The mechanic who changed his mind the next moment..! What happened..?

Next Post

30 நாட்கள் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன நடக்கும்..? நம்ப முடியாத நன்மைகள்..

Thu Nov 13 , 2025
What happens to your body if you stop eating white sugar for 30 days? Unbelievable benefits..
Sugar 2025

You May Like