உளுந்தூர்பேட்டை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் மேம்பாலத்தில் இன்று காலை கோர விபத்து ஏற்பட்டது. வேகமாக சென்ற கார் ஒன்றின் முன் திடீரென நாய் குறுக்கே வந்ததால், கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த டேங்கர் லாரியில் மோதி தலைகீழாய் கவிழந்தது.
தகவல் அறிந்து சமப்வ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காரில் பயணித்த ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில், மேம்பாலத்தில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: ICMR-ல் வேலை வாய்ப்பு.. மாதம் ரூ.1,12,400 சம்பளம்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! செம சான்ஸ்..