OTT: ஆபாசப் பதிவுகள் இடம்பெற்ற 18 ஓடிடி தளங்களை முடக்கிய மத்திய அரசு…!

ஆபாசப் பதிவுகள் இடம்பெற்ற ஓடிடி தளங்களுக்கு எதிராக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை.

ஆபாசப் பதிவுகள் இடம்பெற்ற 18 ஓடிடி தளங்களை முடக்கி தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 19 இணையதளங்கள், 10 செயலிகள் (கூகுள் பிளே ஸ்டோரில் 7, ஆப்பிள் செயலி ஸ்டோரில் 3) மற்றும் இந்தத் தளங்களுடன் தொடர்புடைய 57 சமூக ஊடக கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.

ஆக்கப்பூர்வமான கருத்து என்ற அடிப்படையில் ஆபாசம், அவதூறு ஆகியவற்றை பரப்பக்கூடாது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பலமுறை வலியுறுத்தியுள்ளார். 2024, மார்ச் 12 அன்று ஆபாச பதிவுகளை வெளியிடும் 18 ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தாக்கூர் அறிவித்தார்.

மத்திய அரசின் பிற அமைச்சகங்கள், துறைகள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, பெண்கள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற துறை வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் விதிகளின் கீழ் சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தளங்களில் இடம்பெற்ற கணிசமான பகுதி ஆபாசமாக இருந்ததுடன், பெண்களை இழிவான முறையில் சித்தரித்தது கண்டறியப்பட்டது.

Vignesh

Next Post

Drugs | போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வரலட்சுமிக்கு தொடர்பா..? சரத்குமார் பாஜகவில் இணைய இதுதான் காரணமா..?

Fri Mar 15 , 2024
சமீபத்தில் நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்த நிலையில், சரத்குமாரின் மகள் வரலட்சுமி போதை பொருள் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படுவதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு துறைமுகம் ஒன்றில் 300 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஆதி லிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியிடம் […]

You May Like