நாட்டில் இருக்கின்ற பெண்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு இன்னொரு அட்டகாசமான திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. அதாவது பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நிதி உதவி வழங்குகிறது.
மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கர்ப்பம் பிரசவத்திற்கு பிந்தைய மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து செலவுகளுக்கான நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக அவர்களுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் இந்த தொகையானது நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். தமிழக அரசும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.