டிகிரி போதும்.. மாதம் ரூ.1,12,400 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..

job

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1340 இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய பொதுப்பணித்துறை, மத்திய நீர் ஆணையம், எல்லை சாலைகள் ஆணையம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி: CIVIL, MECHANICAL, ELECTRICAL ஆகிய பிரிவுகளில், ஏதேனும் ஒன்றில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில், எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: பணி பெறுபவர்களுக்கு மாதம் ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை சம்பளம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் முறை: பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கணினி வழியில் நடைபெறும் எனவும், தமிழ்நாட்டில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 எனவும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2025

Read more: 6 விரல்கள் இருப்பதால் மறுக்கப்பட்ட CISF பணி..!! – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

English Summary

The Central Staff Selection Board has issued a notification to fill 1340 Junior Engineer posts in the Central Government.

Next Post

சரோஜா தேவியின் கடைசி ஆசை நிறைவேறியது.. இறந்த பிறகும் உலகை பார்க்கப் போகிறார்.. நெகிழ்ச்சி சம்பவம்..

Wed Jul 16 , 2025
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. அவர் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர்.. சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி பிறந்தார். 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சரோஜா தேவி.. 1958- ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் என்ற […]
saroja devi 1752472747677

You May Like