மத்திய பணியாளர் தேர்வாணையம் Staff Selection Commission (SSC) இந்தியா முழுவதும் காவலர் (Executive Constable) பணியிடங்களை நிரப்ப மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிட விவரம்:
Constable (Executive) ஆண் – 4408
Constable (Executive) ஆண் முன்னாள் படைவீரர்கள் (மற்றோர்) – 285
Constable (Executive) ஆண் முன்னாள் படைவீரர்கள் (கமாண்டோ) – 376
Constable (Executive) பெண் – 2496
மொத்தம் : 7565 காலியிடங்கள்
கல்வித்தகுதி: இதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
சம்பளம்: இந்தப் பணியிடங்களுக்கான சம்பளமாக மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிப்பவர்கள் பல படிநிலைகளில் கீழ் தேர்வுகள் நடைபெறும். முதல் கட்டமாக கணினி அடிப்படையில் ஆன எழுத்துத் தேர்வு அதாவது கம்ப்யூட்டர் பேஸ்ட் எக்ஸாமினேஷன் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் உடல் திறன் மற்றும் அளவீட்டுத் தேர்வு அதாவது Physical Endurance & Measurement Test மற்றும் மருத்துவப் பரிசோதனை என்று சொல்லக்கூடிய Medical Examination ஆகியவற்றில் கலந்துகொள்ள வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது? இந்த பணியிடங்களுக்கு https://ssc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ஆக 100 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் SC/ST/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை.
கடைசி தேதி: விண்ணப்ப கடைசி தேதி ஆக 21.10.2025 நாள் ஆகும்.
Read more: Flash: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு.. கரூரில் ஓயாத மரண ஓலம்..!