“பிரதமரை அச்சுறுத்தும் வகையில் பேசுவதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்..” அண்ணாமலை பதிலடி..!

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “ நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது.. தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வரப்போகின்றனர்.. ஆரம்பத்தில் இருந்தே இதுகுறித்து நாம் எச்சரித்து வந்தோம்.. மக்களை தொகையை கட்டுப்படுத்துங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னதை நாங்கள் கேட்டோம்.. சொன்னதை கேட்டதற்காகவே எங்களுக்கு தண்டனை தருகிறீர்களா…?


நடக்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எங்கள் எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள்.. தமிழ்நாட்டிற்கு பாதிக்கப்படும் மாதி அல்லது வட மாநிலங்களுக்கு வாரி வழங்குவதை போல் தொகுதிகளையும் அதிகப்படுத்த முயற்சி செய்தாலோ நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.. வீதியில் இறங்கி போராடுவோம்.. தொகுதி மறுவரை தொடர்பாக மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்..

இதுவரை பார்த்திராக தமிழ்நாட்டை பார்க்க வேண்டியிருக்கும். தொகுதி மறுவரை செய்தால் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். தேர்தல், ஆட்சி அதிகாரம் எங்களுக்கு 2-ம் பட்சம் தான், கொள்கையும், சுயமரியாதையும் தான் முக்கியம்.. பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும்.. இது மிரட்டல் இல்லை. தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை.. தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்..” என்று தெரிவித்தார்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தது ஏற்புடையது அல்ல.. அரசியல் சாசனத்தின் மீது உறுதி மொழி எடுத்த முதலமைச்சர் பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்து பேசுவது சரியா..? பிரதமரை அச்சுறுத்தும் வகையில் பேசுவதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்..

தென் மாநிலங்கள் பாதிக்காத வகையில் தான் பிரதமர் மோடி தொகுதி மறுவரையறை செய்கிறார்.. தொகுதி மறுவரையறை மூலம் எம்.பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளது.. தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டுக்கு 59 தொகுதி வரை வர வாய்ப்புள்ளது..

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதியை பிரித்தால் 31ஆக குறையும், அப்படி செய்யவில்லை.. 816 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

தினமும் ரூ. 300 சேமித்தால் ரூ. 40 லட்சம் உங்களுடையது.. போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Tue Apr 14 , 2026
Rs. 40 lakhs is yours if you save Rs. 300 every day.. Do you know about this scheme of the Post Office..?
post office scheme 1

You May Like