“முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்.. Wait பண்ணுங்க மக்களே..” விஜய்யை பங்கம் செய்த அதிமுக ஐடி விங்..!

vijay admk it wing

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. சென்னை தலைமை செயலக நுழைவு வாயில் அருகே புதிய பேருந்து சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.. மேலும் பெரம்பூருக்கு இயக்கப்படும் 29 ஏ புதிய பேருந்தில் ஏறி முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்..


அவருடன் போக்குவரத்துறை அமைச்சர் பார்த்திபனும் பயணம் செய்தார்.. புதிய பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் முதல்வர் விஜய் கலந்துரையாடினார். சென்னை மாநகரப் பேருந்தில் அமர்ந்த படியே வீடியோ எடுத்துக் கொண்டே முதல்வர் விஜய் பயணம் செய்தார். எனினும் முதல்வர் பயணம் செய்ததால் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்..

இந்த நிலையில் முதல்வர் விஜய்யை விமர்சித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.. அந்த பதிவில் “ முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்…. Wait பண்ணுங்க மக்களே… என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க? 6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல? “அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது, அப்போ புரியல… இப்போ புரியுது!” என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளது.. மேலும் போக்குவரத்து பாதிப்பால் கோபமடைந்த பொதுமக்கள் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோவையும் பதிவிட்டுள்ளது.

Read More : “அப்பாவை சட்டமன்றத்தில் தேடாதீங்க.. மக்கள் மனதில் இருக்கிறேன்..” முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி..!

English Summary

The AIADMK IT Wing has posted a criticism of Chief Minister Vijay on its X page.

RUPA

Next Post

மத்திய அரசின் மிகச் சிறந்த திட்டம்..! ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் ரூ. 20,000 கிடைக்கும்.!

Thu Jun 25 , 2026
The Central Government is implementing an excellent savings scheme for the elderly and pensioners.
money 1 e1765948687998

You May Like