பங்களாதேஷை சேர்ந்த 12 சிறுமியை இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே வசாய் நைகாவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் விபச்சார தொழில் நடப்பதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த போலீசார், மாற்று உடையில் கண்காணித்தனர். பின்னர், அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த கட்டிடத்திற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.
அப்போது, அங்கு 12 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. பின்னர், அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பங்களாதேஷை சேர்ந்த சிறுமி என்பது தெரிந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 10 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அந்த சிறுமி மீட்கப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு வைத்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அந்த சிறுமியை கடத்தல்காரர்கள், குஜராத் மாநிலம் நாடியாட் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கட்டாயப்படுத்தி அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். 3 மாதங்களில் அந்த சிறுமியுடன் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உடலுறவு வைத்திருந்தது காவல்துறையினரையே பேரதிர்க்குள்ளாக்கியது.
மேலும், சிறுமியின் பின்னணி குறித்து விசாரிக்கையில், இவர், பள்ளியில் படித்தபோது, ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால், பெற்றோர்கள் அடிப்பார்கள் என நினைத்து, அவர்களுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார். பின்னர், ஒரு கும்பல், அந்த சிறுமியிடம் நைசாக பேசி இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், இங்கு வந்து அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : இதய நோய் முதல் உடல் எடை குறைப்பு வரை..!! இந்த ஒரு பொருளை உங்க சமையலில் சேர்க்க மறந்துறாதீங்க..!!