கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் கடந்த 13 ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பினை நடத்தி வருகிறார். சனிக்கிழமை தோறும் மக்களை சந்திக்கும் விஜய் இன்று பிற்பகலில் நாமக்கலில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இந்த பரிதாபகரமான சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் காயமடைந்த 52 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மொத்தம் 113 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கவின் என்ற 34 வயது நபர் உயிரிழந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது.
Read more: இந்த பிரச்சனை உள்ளவர்கள் மட்டன் சாப்பிட கூடாது.. ஏன் தெரியுமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!



