டிசம்பர் 1, 2 ஆகிய இரண்டு நாள்கள்‌…! அரசு அலுவலர்களுக்கு இது கட்டாயம்…! அதிரடி உத்தரவு…!

டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழ் மொழி பயிலரங்கம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்களில்‌ ஆட்சிமொழித்திட்டச்‌ செயலாக்கம்‌ விரைவாகவும்‌, முழுமையாகவும்‌ நடைபெறத்‌ துணைபுரியும்‌ வகையில்‌ ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ ஆட்சிமொழிப்‌ பயிலரங்கம்‌ மற்றும்‌ கருத்தரங்கம்‌ தமிழ்‌ வளர்ச்சித்துறை சார்பாக நடத்த பெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ 2022-23ஆம்‌ ஆண்டிற்கு ஆட்சிமொழிப்‌ பயிலரங்கம்‌, கருத்தரங்கம்‌ 01.12.2022, 02.12.2022 ஆகிய இரண்டு நாள்கள்‌ தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில்‌ காலை 10.00மணி முதல்‌ மாலை 05.45 மணிவரை நடைபெறும்‌. பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்‌ வழங்கப்பெறும்‌.


மாவட்டத்திலுள்ள அனைத்துத்‌ துறை/வாரியம்‌, கழகம்‌, தன்னாட்சி நிறுவனங்களிலிருந்து அலுவலர்‌ ஒருவர்‌ மற்றும்‌ பணியாளர்‌ தொகுதி பொறுப்பு வகிக்கும்‌ கண்காணிப்பாளர்‌ நிலையில்‌ ஒருவர்‌ என ஒருவர்‌ இரண்டு நாள்கள்‌ நடைபெறும்‌ ஆட்சிமொழிப்‌ பயிரங்கத்திலும்‌ 2.12.2022 பிற்பகல்‌ 03 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ நடைபெறும்‌ ஆட்சிமொழி கருத்தரங்கில்‌ மாவட்ட நிலை அலுவலர்கள்‌, கோட்ட அலுவலர்கள்‌, வட்ட நிலை அலுவலர்கள்‌, பல்வேறு துறை அலுவலகங்களின்‌ அலுவலர்கள்‌ தவறாமல்‌ பங்கேற்க வேண்டும்‌.

பயிலரங்கத்தின்‌ வாயிலாக ஆட்சிமொழித் திட்டத்தின்‌ இன்றியமையாமை, திட்டச்‌ செயலாக்கம்‌, செயலாக்கத்தின்‌ பல்வேறு நிலைகள்‌ ,அரசு அலுவலர்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ அனைவரும்‌ தமிழில்‌ மட்டுமே ஒப்பம்‌, சுருக்கொப்பமிட வேண்டும்‌ என்பது முதல்‌ அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழித்‌ திட்ட அரசாணைகள்‌ மற்றும்‌ பட்டறிவும்‌ எடுத்துரைக்கப்படும்‌. தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்துத்‌ துறை அரசு அலுவலர்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆட்சிமொழிப்‌ பயிலரங்கம்‌ மற்றும்‌ கருத்தரங்கில்‌ பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

செம வாய்ப்பு...!உங்களிடம் இந்த பழைய நாணயம் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம்...! ரிசர்வ் வங்கி அறிவிப்பு...!

Sun Nov 27 , 2022
பழைய 1 ரூபாய் மற்றும் 50 பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால் வங்கிகள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். உங்களிடம் பழைய 1 ரூபாய் மற்றும் 50 உங்களிடம் இந்த பழைய நாணயம் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம் பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால், அந்த நாணயங்களை வங்கியில் டெபாசிட் செய்ய விரும்பினால், எந்த சிரமமும் இல்லாமல் வங்கியில் டெபாசிட் செய்யலாம். ஆனால் நீங்கள் பழைய நாணயங்களை டெபாசிட் செய்தவுடன், […]
IMG 20221127 054827

You May Like