பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை மாவட்ட சமூக நல அலுவலகம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியிட விவரம்:
மைய நிர்வாகி – 5
மூத்த ஆலோசகர் – 5
தகவல் தொழில்நுட்ப பணியாளர் – 5
வழக்கு பணியாளர்கள் – 30
பாதுகாப்பாளர் – 10
பன்முக உதவியாளர் – 10
காலியிடங்கள் மற்றும் தகுதி:
மைய நிர்வாகி, வழக்கு பணியாளர், மூத்த ஆலோசகர்
* சமூகப் பணியில் அல்லது உளவியலில் முதுகலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
* பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு திட்டங்கள் தொடர்பாக குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Staff)
* கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் / டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
* மாநில, மாவட்ட அல்லது தன்னார்வ அமைப்புகளில் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
பாதுகாப்பாளர் (Security)
* பாதுகாப்புப் பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பன்முக உதவியாளர் (Multi-purpose Helper)
* சமையல் மற்றும் அலுவலக பராமரிப்பு பணிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
- மைய நிர்வாகி – ரூ. 35,000
- மூத்த ஆலோசகர் – ரூ.22,000
- தகவல் தொழில்நுட்ப பணியாளர் – ரூ.20,000
- வழக்கு பணியாளர்கள் – ரூ.18,000
- பாதுகாப்பாளர் – ரூ.12,000
- பன்முக உதவியாளர் – ரூ.10,000
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதி மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் https://chennai.nic.in/ என்ற மாவட்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது இமெயில் முகவரி மூலமோ அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2025 மாலை 5 மணி வரை.
முகவரி
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
8வது தளம், சிங்காரவேலர் மாளிகை,
ராஜாஜி சாலை,
சென்னை – 01.
இமெயில் முகவரி : oscchennaib@gmail.com
Read more: ரஷ்ய எண்ணெய் விவகாரம்.. கொளுத்தி போட்ட ட்ரம்ப்.. இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா கொடுத்த பதிலடி..