தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ், மாவட்ட அளவில் தற்காலிக அடிப்படையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை, மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 44 காலிப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
நிரப்பப்படும் பணியிடங்கள்:
- துணை செவிலியர்
- பன்மடங்கு தொழில்நுட்ப வல்லுநர்
- ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர்
- லிப்ட் மெக்கானிக்
- சைட்டோ தொழில்நுட்ப வல்லுநர்
- தொழில்சார் சிகிச்சையாளர்
- ஸ்டெரிலைசேஷன் ஆபரேட்டர்
- கொதிகலன் (பாய்லர்) மெக்கானிக்
- ரத்த வங்கி ஆலோசகர்
- செவிலியர்
- சமையலாளர்
- சலவையாளர்
- உணவியல் நிபுணர்
- ரேடியோகிராப்பர்
கல்வித்தகுதி விவரம்:
- செவிலியர் (Nursing)
- அனஸ்டீசியா டெக்னீஷியன் சான்றிதழ் படிப்பு
- எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) / டிரெட்மில் டெக்னீஷியன் சான்றிதழ் படிப்பு
- ஐடிஐ (ITI)
- மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் முதுகலை பட்டப்படிப்பு (M.Sc)
- ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் (Occupational Therapist) பட்டப்படிப்பு
- ஸ்டெரிலைசேஷன் டெக்னாலஜி டிப்ளமோ
- மெக்கானிக்கல் / எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ
- மெடிக்கல் உளவியல் (Medical Psychology) முதுகலை பட்டப்படிப்பு
- உணவு மற்றும் ஊட்டச்சத்து (Food & Nutrition) தொடர்பான படிப்புகள்
- ரேடியோகிராப்பர் டிப்ளமோ
- சமையலாளர் மற்றும் சலவையாளர் பதவிகளுக்கு தமிழ் எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளம்: இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000 முதல் அதிகபடியாக ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.12.2025
Read more: தாடி இல்லாத இயேசுவின் அரிய பழங்கால ஓவியம்.. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!



