மத்திய அரசின் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (ECGC), நிர்வாக பிரிவில் ப்ரொபஷனரி அதிகாரி (Probationary Officer) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்;
- ப்ரொபஷனரி அதிகாரி (பொது) – 28
- ப்ரொபஷனரி அதிகாரி (சிறப்பு பிரிவு) – 2
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 20 என்றும், அதிகபட்ச வயது 30 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, விண்ணப்பதாரர்கள் 02.11.1995 க்கு முன்னர் பிறந்திருக்கக் கூடாது, மேலும் 01.11.2004 க்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
கல்வித்தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து மதிப்பெண் பட்டியல் (Mark Sheets) மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை (Degree Certificates) பெற்றிருக்க வேண்டும்.
* மேலும், சிறப்பு பிரிவில் உள்ள 2 இடங்களுக்கு மட்டும், இந்தி மொழியில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அல்லது இந்தி மொழியை ஒரு பாடமாகக் கொண்டு ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு ரூ.88,635 முதல் அதிகபடியாக ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். கொடுப்பனை, அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட சலுகைகள் உண்டு. ஒரு வருடத்திற்கு ரூ.20 லட்சம் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசு நிறுவனத்தில் வெளியாகியுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வு இரண்டு தாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தாள் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு, கொள்குறி (Objective) வகையில் அமையும். இதில் நுண்ணறிவு (Reasoning), ஆங்கிலம் (English), கணினி திறன் (Computer Knowledge), பொது விழிப்புணர்வு (General Awareness) என்பன அடங்கும்.
இரண்டாம் தாள் 40 மதிப்பெண்களுக்கு, கட்டுரை வடிவில் (Descriptive Type) நடைபெறும். இதில் இரண்டு கேள்விகளுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் இரண்டாம் தாள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். கட்-அஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்வில் நெகட்டிவ் மார்க் உண்டு எனவும், தேர்வு மையங்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு https://main.ecgc.in/english/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 02.12.2025 ஆகும்.



