நோட்..! திட்டமிட்டபடி தேர்வு… முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது…!

trb teachers recruitment board

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை பெறப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது நிலுவையில் உள்ளது. ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அக். 12-ம் தேதி அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; 2025-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நிரப்புவதற்கான போட்டித்தேர்வு அக்டோபர் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வெழுத 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஷாக்..! வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்வு...!

Wed Oct 1 , 2025
சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,754.50-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் […]
cylinder price 11zon

You May Like