முக்கிய அறிவிப்பு..! TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…!

tnpsc exam 2025

ஒருங்கிணைந்த குடிமைப் பணி (தொகுதி II மற்றும் IIA பணிகள்) தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 11.2025, நாள் 15.07.2025-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகைத் தேர்வு 28.09.2025 தேதியில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பகீர் வீடியோ!. 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கையால் கதிகலங்கும் ரஷ்யா!.

Fri Sep 19 , 2025
ரஷ்யாவின் கம்சட்கா தீவுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பயங்கர நிலநடுக்கத்தின் ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன, இதில் தளபாடங்கள், கார்கள் மற்றும் விளக்குகள் கடுமையாக குலுங்குகின்றன. இதேபோல், ஒரு வாரத்திற்கு முன்பு, ரஷ்யாவை ஒரு வலுவான நிலநடுக்கம் தாக்கியது. கம்சட்கா பகுதிக்கு அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. […]
russia earthquake

You May Like