Flash: பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. 60 பேரின் நிலை என்ன..?

blast 1712152099

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டின் பட்டாசு தயாரிப்பு மையமாக அறியப்படுகிறது. சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆலைகள் உள்ளன. தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மடத்துப்பட்டியில் பட்டாசு ஆலை இன்று வழக்கம் போல் இயங்கி வந்தது. திடீரென பயங்கர சத்ததுடன் 4 முறை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 60க்கு மேற்பட்டோர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி முழுவதும் புகை மண்டலத்துடன் காட்சி அளிக்கிறது.

Read more: முகத்தில் வீசப்பட்ட செல்போன்.. கண்கலங்கி நின்ற அண்ணாமலை.. பிரச்சாரத்தில் பரபரப்பு..!

English Summary

The fireworks factory exploded with a terrible noise.. What is the condition of the 60 people..?

Next Post

5 கிலோ சிலிண்டர் குறித்து மத்திய அரசின் மற்றொரு திடீர் முடிவு..! கேஸ் நுகர்வோருக்குப் பெரும் நிம்மதி..!

Mon Apr 13 , 2026
எரிவாயு விநியோகத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை, ஈரான்-இஸ்ரேல் போரின் காரணமாக மூடப்பட்டிருப்பது, உலகளாவிய எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதியைப் பாதித்து வருகிறது. தனது எரிவாயு மற்றும் எரிபொருள் தேவைகளில் பெரும்பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இந்தியா, இதனால் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. நாட்டில் எரிவாயு பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், நிலைமை ஏற்கனவே மோசமாகவே உள்ளது. இந்த சூழலில், எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகத்தை […]
5KG GAS CYLINDER 1 1

You May Like