முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு அர்லேகருக்கு காவல்துறை சார்பில் மரியாதை வழங்கப்பட்டது.. சட்டமன்றத்திற்கு வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர் செங்கோட்டையன் வரவேற்று அழைத்து சென்றனர்..
சரியாக 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர், தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.. தமிழ் தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.. பொதுவாக கூட்டத்தின் இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும்.. ஆனால் சட்டப்பேரவையில் வழக்கத்திற்கு மாறாக கூட்டத்தின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடப்பட்டது. அதாவது முதன்முறையாக ஆளுநர் உரைக்கு முன்னதாக தேசிய கீதம் பாடப்பட்டது..
தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.. அப்போது பேசிய அவர் “ இமயமலை அளவிற்கான வெற்றியை விசில் புரட்சி மூலம் முதல்வர் விஜய் பெற்றுள்ளார்.. கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் மக்களின் பெரும் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது. இரண்டே ஆண்டுகளில் மக்களின் நன்மதிப்பை பெற்று தமிழ்நாட்டின் விஜய் முதலமைச்சராகி உள்ளார். எம்ஜிஆர் 1977-ல் ஏற்படுத்திய புரட்சியை போல் 2026-ல் விஜய் ஏற்படுத்தி உள்ளார்.. பெண்கள் நலன், குழந்தைகள் நலன், மாநில உரிமைகளை முன்னிறுத்தி இந்த ஆட்சி செயல்படும்..” என்று தெரிவித்தார்..
Read More : ” வாய திறங்க CM…” கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை..!



