விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, ஜனநாயகன் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய்யின் படங்களை அவரின் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும், பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் விஜய்யின் சமீபத்திய படங்களான லியோ, கோட் ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் ஏற்கனவே கமிட்டான படத்தை முடித்து விட்டு, முழு நேர அரசியலில் தீவிரமாக ஈடுபட போவதாகவும் கூறியிருந்தார். அந்த வகையில், விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் அவரின் கடைசி படமாக அமைந்துள்ளது. ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பாபி தியோல், நரேன், பிரியா மணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கேவிஎன் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. வரும் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் ஜனநாயகன் படத்தின் வெளியாகுமா என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
அதன்படி கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அந்த அப்டேட்டை இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி விஜய் பிறந்தநாளான 22-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில் “ சிங்கம் எப்போதும் சிங்கம்தான். அதன் முதல் கர்ஜனை வருகிறது.. ஜூன் 22 அதிகாலை 12.00 மணி..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விஜய் பிறந்தநாளன்று வெளியாக போவது முதல் சிங்கிளா அல்லது முதல் க்ளிம்ப்ஸ் வீடியோவா என்பது தெரியவில்லை. எது எப்படியோ விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Read More : “பாபா படத்தால் என் கெரியரே காலி..” நடிகை மனிஷா கொய்ராலா ஓபன் டாக்..