பெருமாள் மாதமாக கொண்டாடப்படும் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 20 இன்று வருகிறது. 2025 புரட்டாசி முதல் சனிக்கிழமை என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
புரட்டாசி மாதம் என்றாலே, புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, படையல், என்று ஒவ்வொரு சனிக்கிழமையும் களைகட்டும். இன்று, செப்டம்பர் 20, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை ஆகும். புரட்டாசி சனிக்கிழமைகளில், முதல் சனி, இரட்டிப்புப் பலன்களைத் தரும். இந்த நாளில் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று, நீங்கள் செய்யும் வழிபாடு, இரட்டிப்பு பலன்கள் கொடுக்கும் என்பது ஐதீகம். கக்கும் கடவுளான மகாவிஷ்ணு, உங்களுக்குத் தேவையான அனைத்தையும் தருவார்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று நீங்கள் பெருமாளுக்கு படையல் போடா விரும்பினால், அதை செய்யலாம். அல்லது, வீட்டில் குத்து விளக்கேற்றி, பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயார் படங்களுக்கு பூக்கள் வைத்து பூஜை செய்யலாம். பூஜை செய்து முடிக்கும் வரை விரதம் இருப்பது நல்லது. புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அன்று, அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று, பெருமாளையும் தாயாரையும் தரிசித்து வரவும்.
வீட்டில் மட்டுமல்ல, கோவிலுக்கு சென்றாலும், பெருமாளுக்கு துளசி மாலை சாற்றலாம். அதே போல தாயாருக்கு தாமரை பூ அல்லது ரோஜா பூவை வைத்து பூஜிக்கலாம். புரட்டாசி மாதம் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும், பெருமாளுக்கு பிரசாதமாக ஒவ்வொரு உணவை செய்து நைவேத்தியம் செய்யலாம். 2025 புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று புளியோதரை செய்து நைவேத்தியம் செய்யவும். தெய்வத்துக்கு செய்யப்படும் நைவேத்தியங்களில் சர்க்கரை பொங்கல் மிகவும் விசேஷமானது. எனவே, ஒவ்வொரு வாரமும் சர்க்கரை பொங்கல் செய்யலாம்; முதல் சனிக்கிழமை செய்வது மிக விசேஷமாகும்.
பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதும் மிகவும் விசேஷமானது. குடும்பம் சீரும் சிறப்புமாக வாழ, கண்களுக்கு தெரியாத தொல்லைகள் மற்றும் தோஷம் நீங்க, புரட்டாசி முதல் சனிக்கிழமை மாவிளக்கு தீபம் ஏற்றலாம். புரட்டாசி முதல் சனிக்கிழமையில், பெருமாள் வழிபாடு மட்டுமல்ல, காகத்துக்கும் உணவளியுங்கள். முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.