10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. துபாயில் வேலை.. உணவு தங்குமிடம் இலவசம்..!! தமிழக அரசு செம அறிவிப்பு..

job 1

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (Overseas Manpower Corporation Limited – OMCL) மூலமாக, துபாயில் பல்வேறு தொழில்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பணியிடங்கள்: துபாயில் தற்போது பின்வரும் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்:

  • எலெக்ட்ரீஷியன்
  • பிளம்பர்
  • மாசன்
  • ஃபிட்டர்
  • பெயிண்டர்
  • லேபர்

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு: இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியோ அல்லது தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் 1 வருடம் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். துபாய் பணிக்கு 22 முதல் 45 வயதிற்குள் இருக்கும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: எலெக்ட்ரிஷியன், பிளம்பர், மான்சன், பிட்டர் ஆகிய பதவிகளுக்கு மாதம் ரூ.47,250 சம்பளமாக வழங்கப்படுகிறது. பெயிண்டர் பதவிக்கு ரூ.44,100 மற்றும் லேபர் பணிக்கு ரூ.29,900 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இந்த பணிக்கு தேர்வாகி, பணியில் சேரும் நபர்களின் உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும் தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? துபாய் வேலைவாய்ப்பில் சேர விருப்பமுள்ளவர்கள், தங்களின் சுயவிவரம், கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் நகல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் நவம்பர் 7-ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

அதன்பின்னர் அனைத்து அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் திருச்சியில் நவம்பர் 8-ம் தேதி நடைபெறவுள்ள நேர்காணலில் நேரடியாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை https://omcmanpower.tn.gov.in/ என்ற இணையதளம் மற்றும் 044-22502267 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.

நேர்காணல் முகவரி:

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,

திருவெறும்பூர் : 620014.

திருச்சி மாவட்டம்.

Read more: பெயரும் இல்லை, குறியீடும் இல்லை.. இந்தியாவின் பெயரிடப்படாத ஒரே ரயில் நிலையம் இது தான்..!

English Summary

The Foreign Employment Agency has announced job openings for various professions in Dubai.

Next Post

Breaking : விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்..! அதிமுகவின் அழைப்பு நிராகரிப்பு..!

Wed Nov 5 , 2025
தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த  தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. முதல் தீர்மானமாக கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. […]
Vijay 2025 1

You May Like