காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெள்ளியணை ராமநாதன் (91) உடல்நலக்குறைவால் காலமானார். 1957-ல் கருணாநிதி வென்ற குளித்தலை தொகுதியில், 1962 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 26 வயதில் MLA-ஆக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.. குளித்தலை தொகுதியின் 2-வது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றார்.. கடைசி வரை காங்கிரஸ் கட்சியிலேயே இருந்த அவர் கட்சிக்காக பாடுபட்டார்..
அவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு கட்சியை அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..



